9 ராணுவ வீரர்கள் பலி! நாட்டையே சோகத்தில் ஆழ்த்திய லடாக் விபத்து!  - Seithipunal
Seithipunal


லடாக்கில் இந்திய ராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துகுள்ளானதில், 9 ராணுவ வீரர்கள் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மாலை 6 மணியளவில் லடாக்கின் கியாரி பகுதியிலிருந்து 7 கிமீ தொலைவில் ராணுவ வீரர்கள் சென்ற வாகனம் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து உள்ளது.

இந்த வாகனத்தில் 10 பேர் பயணம் செய்து உள்ளதாகவும், அதில் ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர் என்றும், காயமடைந்த வீரர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக  இந்திய ராணுவ அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

லடாக்கில்  நடந்த விபத்தில் இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்தது வருத்தமளிப்பதாக,  மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும், "நமது தேசத்திற்கு அவர்களின் முன்மாதிரியான சேவையை நாம் ஒருபோதும் மறக்க மாட்டோம். என் எண்ணங்கள் இறந்த குடும்பங்களுடன் உள்ளன. காயமடைந்த வீரர்கள் கள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். அவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்" என்று அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ladakh Kyari lah indian army car accident


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->