38 ஆண்டுகளுக்குப் பின் கிடைத்த ராணுவ வீரரின் உடல்.! அடையாளம் காண உதவிய உலோக பேட்ஜ்.!
Lansenaik Chandrasekhar body Found by Army
கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன இந்திய ராணுவ வீரரின் உடல் தற்போது கண்டெடுக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான்-இந்தியா எல்லையில் 38 ஆண்டுகளுக்கு முன் லான்ஸ்நாயக் சந்திரசேகர் என்ற இந்திய ராணுவ வீரர் மாயமாகியுள்ளார். அவரது உடலை கண்டறிய இந்திய ராணுவம் தீவிரமாக தேடுதல் வேட்டை நடத்தியது. ஆனால், எவ்வளவு முயன்றும் அவரது உடலை கண்டெடுக்க முடியவில்லை.
இத்தகைய நிலையில், 38 ஆண்டுகளுக்கு பின் தற்போது இந்திய பாகிஸ்தான் எல்லையில் சியாச்சின் பனிப்பிரதேசத்தில் அவரது உடல் கிடைத்துள்ளது. அப்பகுதியில் ரோந்து பணியில் இந்திய ராணுவ வீரர்கள் ஈடுபட்டபோது அவரது உடலின் பாகங்கள் கிடைத்துள்ளது.அவரது உடல் பாகங்களுடன் இருந்த சில அடையாளங்களை கொண்டு இது லான்ஸ் நாயக் சந்திரசேகரின் உடல் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அவரது உடலுடன் அடையாள எண் கொண்ட உலோக பேட்ச் கிடைத்ததை கொண்டு இது லான்ஸ் நாயக் என்பதை ராணுவ அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். இந்த சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே உருக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
English Summary
Lansenaik Chandrasekhar body Found by Army