மத்திய அரசில் பணிபுரியும் அதிகாரிகளுக்கு லேப்டாப் வழங்க முடிவு.!! - Seithipunal
Seithipunal


மத்திய அரசில் பணிபுரியும் அதிகாரிகளுக்கு லேப்டாப் வழங்க முடிவு.!!

மத்திய அரசின் கீழ் பணிபுரியும் அதிகாரிகளுக்கு அலுவல் ரீதியான பணிகளுக்காக மடி கணினி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய நிதி அமைச்சகத்தின் செலவினத் துறை செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த செய்திக்குறிப்பில், ‘மத்திய அரசில் பணி புரியும் துணைச் செயலா் அல்லது அதற்கு மேல் பொறுப்பில் உள்ள அனைத்து அதிகாரிகளுக்கும், மற்ற நிலை அதிகாரிகளில் 50 சதவீதம் பேருக்கும் அதிகாரபூா்வ பணிக்காக மின்னணு சாதனங்கள் (லேப்டாப்) வழங்கலாம்.

அந்த மின்னணு சாதனத்தின் விலையானது வரிகள் இல்லாமல் ரூ.1 லட்சம் இருக்க வேண்டும். 40 சதவீதத்திற்கும் மேலாக இந்திய தயாரிப்பில் உருவான சாதனங்களை வரிகள் நீங்கலாக ரூ.1.30 லட்சம் வரை விலை கொடுத்து வாங்கலாம். 

ஏற்கெனவே, ஒரு சாதனம் ஒதுக்கப்பட்ட அதிகாரிக்கு நான்கு ஆண்டுகள் வரை புதிய சாதனம் வழங்கப்படக் கூடாது. நான்கு ஆண்டுகள் பயன்படுத்திய பிறகு, அந்த மின்சாதனத்தை சொந்த தேவைக்காக அதிகாரிகள் வைத்துக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

laptop provide to central govt employers


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->