மாணவர்களை ராகுல்காந்தி சந்திப்பாரா? தைரியம் இருக்கிறதா? - மத்திய இணையமைச்சர் பண்டி சஞ்சய்! - Seithipunal
Seithipunal


தெலுங்கானா மாணவர்களை சந்திக்க எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு தைரியம் இருக்கிறதா? என மத்திய இணையமைச்சர் பண்டி சஞ்சய் தெரிவித்துள்ளார்.

தெலுங்கானா மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் அரசை கண்டித்து மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். காங்கிரஸ் அரசு அளித்த வேலைவாய்ப்பு வாக்குறுதியை நிறைவேற்றவில்லை வேலைவாய்ப்பு வழங்கவில்லை என போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் தெலுங்கானாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்தநிலையில், தெலுங்கானாவில் பாஜக மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் மாநிலத்தின் மூத்த தலைவர் மத்திய உள்துறை இணைஅமைச்சர் பண்டி சஞ்சய் கலந்து கொண்டார். பின்னர் அவர் பேசியதாவது, பாஜக ஆளும் மாநிலங்களில் வேலையில்லா திண்டாட்டம் பரவுகிறது என்று பேசும் ராகுல் காந்தி ஹைதராபாத் உஸ்பானிய பல்கலைக்க சென்று மாணவர்களுக்கு வாக்குறுதி கொடுக்க முடியுமா?

நான் சவால் விடுகிறேன். உஸ்மானிய பல்கலைக்கழக மாணவர்களை சந்திக்க ராகுல் காந்தி தைரியம் இருக்கிறதா?தெலுங்கானாவில் இளைஞர்களுக்கு காங்கிரஸ் கட்சி வேலை வழங்காமல் ஏமாற்றி வருகிறது. கடந்த ஏழு மாதங்களில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க காங்கிரஸ் கட்சி தவறிவிட்டது. 

பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்தவுடன் விவசாயிகளுக்கு கிஷான் சமான் நிதியை வெளியிட்டு குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்தினார். மாநிலத்தில் வாக்கு சதவீதம் அதிகரித்து இருப்பது தெலுங்கானா மக்கள் பாஜகவுக்கு ஆதரவளித்து வருவதை எடுத்துக்காட்டுகிறது என்று தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Leader of Opposition Rahul Gandhi have the guts to meet Telangana students Union Minister of State Pandi Sanjay


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->