அடுத்த அதிர்ச்சி... வயநாட்டில் நில அதிர்வு.. பள்ளிகளுக்கு பறந்த உத்தரவு.! - Seithipunal
Seithipunal


சமீபத்தில் பெய்த மழையில் கேரளா மாநிலம் வயநாடு பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டு மூன்று கிராமங்கள் தரைமட்டம் ஆனது. இதில் நானூறுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுடன் ஏராளமானோர் படுகாயமடைந்தனர். 

இந்த சம்பவத்தில் இருந்து மக்கள் இன்னும் மீளாத நிலையில், இன்று வயநாட்டில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இதனால், மக்கள் பீதியில் உள்ளனர்.

கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் அருகே அம்புகுத்தி பள்ளத்தாக்கு மலைப்பகுதியில் உள்ள குறிச்சியார்மலை, பிணங்கோடு, அம்புகுத்திமலை, அம்பலவாயல், எடக்கல் குகைப் பகுதிகளில் இன்று நில அதிர்வு ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

இதையறிந்த, புவியியல் ஆய்வு மைய அதிகாரிகள் நேரில் சென்று சம்பவ இடத்தில் ஆய்வு நடத்தினர். இதையடுத்து, நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதியில் இருந்து குடியிருப்புவாசிகள் வெளியேற மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

இதற்கிடையே அம்பலவாயல் வட்டார வேளாண்மை ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள் நில அதிர்வு ஏற்பட்ட பகுதிகளை ஆய்வு செய்து உறுதி செய்தனர். இந்த நில அதிர்வு அப்பகுதி மக்களை மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கியதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். 
இந்த நிலையில், அம்பலவாயல் பகுதியில் அரசின் கீழ் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

leave to school in wayanadu for earthquake


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->