ஜெயலலிதாவின் 28 வகை பொருட்களை ஒப்படைக்க தமிழக லஞ்ச ஒழிப்பு துறைக்கு கடிதம்.!!
Letter to DVAC to hand over 28 types of Jayalalitha things
மறைந்த முதல்வரும் அதிமுகவின் முன்னாள் பொதுச் செயலாளருமான ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில், பறிமுதல் செய்யப்பட்ட அவரின் சேலைகள், காலணிகள் மற்றும் சால்வைகள் அனைத்தும் கர்நாடக சிறப்பு நீதிமன்றத்தின் கருவூலத்தில் பயன்படுத்தாமல் வீணாகி வருகிறது. இதனை ஏலம் விட வேண்டும் என பெங்களூருவை சேர்ந்த ஆர்.டி.ஐ ஆர்வலர் டி.நரசிம்மமூர்த்தி கர்நாடக சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த கர்நாடக உயர் நீதிமன்றம் அரசு வழக்கறிஞரை நியமித்து, கர்நாடக சிறப்பு நீதிமன்றத்தில் உள்ள ஜெயலலிதாவின் சொத்துக்களை முறைப்படி ஏலம் விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடந்த ஜனவரி 24ம் தேதி உத்தரவிட்டது.
சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் கர்நாடக மாநில அரசு வழக்கறிஞர் கிரண் எஸ் ஜவாலி நியமனம் செய்யப்பட்டார். இந்த நிலையில்சொத்துக்கு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட ஜெயலலிதாவின் பொருட்களை ஒப்படைக்க கோரி தமிழக லஞ்ச ஒழிப்பு துறைக்கு கர்நாடக அரசு வழக்கறிஞர் கடிதம் எழுதியுள்ளார்.
அதில் ஜெயலலிதாவின் விலை உயர்ந்த கடிகாரம் 11 ஆயிரம் புடவைகள் பரிசு பொருட்கள் உட்பட 28 வகை பொருட்களை ஒப்படைக்க வேண்டும் எனவும், ஜெயாவின் 30 கிலோ தங்கம் வைர நகைகளை தவிர மற்ற ஏதும் கர்நாடக நீதிமன்றத்தில் இல்லை எனவும் அதில் குறிப்பிட்டுள்ளார். இந்த கடிதத்தின் அடிப்படையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பொருட்கள் அனைத்தும் கர்நாடக நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
Letter to DVAC to hand over 28 types of Jayalalitha things