பீகாரில் பயங்கரம் - ஆண் குழந்தைக்காக பெற்ற மகள்களுக்கு பாலியல் தொல்லை.! - Seithipunal
Seithipunal


பீகாரில் பயங்கரம் - ஆண் குழந்தைக்காக பெற்ற மகள்களுக்கு பாலியல் தொல்லை.! 

பீகார் மாநிலத்தில் உள்ள பக்சர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பினோத் குமார் சிங். இவருக்கு இரண்டு மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இருப்பினும், பினோத்குமார் மீண்டும் ஒரு ஆண் குழந்தை பெற வேண்டும் என்று உள்ளூர் தந்திரியிடம் கடந்த 2012-ம் ஆண்டு ஆலோசனை பெற்றார்.

அப்போது, தந்திரி உங்களது இரண்டு மகள்களைப் பாலியல் பலாத்காரம் செய்தால் உங்களுக்கு ஆண் குழந்தை பிறக்கும் என்று தெரிவித்துள்ளார். அதன் படி பினோத்குமார் தனது இரண்டு மகள்களுக்கும் உயிருக்கு அச்சுறுத்தல் விடுத்து கடந்த பத்து ஆண்டுகளாக பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார்.

இதனால் மனஉளைச்சலுக்கு ஆளான இரண்டு மகள்களும் தனது தந்தையிடம் தப்பித்து, கடந்த ஆண்டு மே மாதம் உள்ளூர் போலீஸில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதுதொடர்பான வழக்கு பக்சர் மாவட்டத்தில் உள்ள போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில், நேற்று இந்த வழக்கை விசாரித்த நீதிபதி குற்றம் சாட்டப்பட்ட பினோத் குமார் சிங் மற்றும் தந்திரி அஜய் குமார் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளார்.

மேலும், இந்த கொடூரமான குற்றத்திற்கு உடந்தையாக இருந்த பினோத்குமாரின் மனைவி மற்றும் அத்தை உள்ளிட்டோருக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

life prison to father for harassment to daughters in bihar


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->