தொடரும் லிவிங் டூகெதர் ரிலேஷன்சிப் கொலைகள்.. பெங்களூரில் பயங்கர சம்பவம்.!
Live in relationship murder in Bangalore
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள கல்வி மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் விற்பனை பிரிவு மேலாளராக அகான்ஷா (வயது 23) என்பவர் பணியாற்றி வந்துள்ளார். அதே நிறுவனத்தில் பணிபுரிந்த ஆர்பித் (வயது 27) என்பவரை சந்தித்து பழகியுள்ளார்.
முதலில் நட்பாக ஆரம்பித்த இருவரும் அதன்பின் நெருக்கமாக பழகி காதலாக மாறியுள்ளது. அதன் பின்னர் இருவரும் ஒரே வீட்டில் தங்கும் அளவிற்கு ரிலேஷன்ஷிப்பாக மாறியது. ஆனால் அடுத்த சிறுத்தை நாட்களிலேயே இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவ்வப்போது வாய்தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் கடந்த 5ம் தேதி இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆர்பித், அகான்ஷாவை கடுமையாக தாக்கி கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த அஹான்சாவின் குடும்பத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதில் போலீசார் நடத்திய விசாரணையில் முதலில் தற்கொலை என்று வழக்கு பதிவு செய்தனர். அதன்பின்னர் சந்தேகத்தின் பெயரில் தீவிர விசாரணை செய்த போலீசார் கொலை என்பதை உறுதி செய்தனர். இந்த நிலையில் தற்போது தலைமறைவாக உள்ள இளைஞரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
English Summary
Live in relationship murder in Bangalore