#BigBreaking | மத்தியில் கூட்டணி ஆட்சி உறுதியானது?! பாஜகவிற்கு தண்ணிகாட்டிய மக்கள்! - Seithipunal
Seithipunal


மத்தியில் எந்த கட்சியும் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க போவதில்லை, கூட்டணி ஆட்சியை அமைய உள்ளதை தேர்தல் முன்னணி நிலவரங்கள் தெரிவிக்கின்றன.

நடந்து முடிந்த மக்களவை பொதுத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை இன்று காலை முதல் நடந்து வருகிறது. தற்போது வரை தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் வெளியான முன்னணி நிலவரப்படி, 543 தொகுதிகளில் பாஜக 241 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. மேலும் குஜராத்தின் சூரத் தொகுதியில் போட்டியின்றி பாஜக வேட்பாளர் ஏற்கனவே வெற்றி பெற்றிருந்தார். 

காங்கிரஸ் கட்சி 95 இடங்களில் முன்னிலை பெற்று வருகிறது. சமாஜ்வாதி 36 இடங்களிலும், திரிணாமுல் காங்கிரஸ் 31 இடங்களிலும், திமுக 21 இடங்களிலும் முன்னிலை பெற்று வருகின்றன. 

பாஜக கூட்டணியில் உள்ள தெலுங்கு தேசம் 16 இடங்களில் முன்னிலை பெற்று வருகிறது. மேலும் மகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜக கூட்டணியில் உள்ள சிவசேனா ஏழு இடங்களில் முன்னிலை பெற்று வருகிறது. 

தமிழகத்தை பொறுத்தவரை பாஜக கூட்டணியில் உள்ள பாமக ஒரு தொகுதியில் முன்னிலை பெற்று வருகிறது. தமிழகத்தில் பாஜக போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் பின்னடைவை சந்தித்துள்ளது.

கடந்த மக்களவைத் தேர்தலைப் போல் அல்லாமல் இந்த முறை பாஜக தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்பது சந்தேகம் என்பது வெளியான முன்னிலை நிலவரங்கள் தெரிவிக்கின்றன. 

மத்தியில் பாஜக தனது கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்துதான் ஆட்சி அமைக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளாகியுள்ளது. 

தேர்தலுக்கு முன்பாக 400 இடங்களில் வென்று தனிப்பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சி அமைக்கும் என்று தெரிவித்த நிலையில், தற்போது பெரும்பான்மை கூட பெற முடியாமல் தவித்துக் கொண்டிருப்பது பாஜகவின் தோல்வியாக காங்கிரஸ் கட்சியினர் விமர்சனம் செய்து வருகின்றனர்,


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Lok Sabha Election 2024 BJP loose Majerity


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->