கேரளாவில் பாஜக வெற்றி! உற்சாக கொண்டாட்டத்தில் பாஜகவினர்!
Lok Sabha Election 2024 Kerala BJP Win
கடந்த இரண்டு மக்களவைத் தேர்தல்களைப் போல் அல்லாமல், இந்த முறை தென் மாநிலங்களை குறி வைத்து பாஜக தேர்தல் பிரச்சாரத்தை தொடர்ந்து மேற்கொண்டு வந்தன.
அதன் எதிரொலி தற்போது இந்த தேர்தல் முடிவுகளில் வெளியாகி கொண்டிருக்கிறது. இந்தியாவின் வட மாநிலங்களில் பாஜக சரிவை சந்தித்தபோதிலும், பாஜக நினைத்தபடியே தென் மாநிலங்களில் தனது கணக்கை தொடங்கியுள்ளது.
முதல் முறையாக கேரள மாநிலத்தில் பாஜக வெற்றியை பதிவு செய்துள்ளது. கேரள மாநிலம், திருச்செந்தூர் தொகுதியில் நடிகர் சுரேஷ் கோபி வெற்றி பெற்று எம்பி ஆக்கி உள்ளார்.
மேலும் கேரளா திருவனந்தபுரம் தொகுதியிலும் பாஜக தொடர்ந்து முன்னிலை பெற்று வருகிறது. அந்த தொகுதிகளையும் வெற்றி பெறுவதற்கு உண்டான வாய்ப்புகள் பிரகாசமாக இருப்பதாக பாஜகவினர் தெரிவித்து வருகின்றனர்.
திருவனந்தபுரத்தில் காங்கிரஸ் கட்சியின் நட்சத்திர வேட்பாளர் சசிததுரை எதிர்த்துப் போட்டியிடும்பாஜக வேட்பாளர் ராஜீவ் சந்திரசேகர் இடையே சுமார் 400 வாக்குகள் வித்தியாசத்திலேயே மாறி மாறி முன்னிலை வைத்து வருகிறார்.
இந்த தொகுதியின் தேர்தல் முடிவு கடைசி சுற்று வரை செல்லும் என்பதால், இந்த தொகுதிகள் யார் வெற்றி பெறுவார் என்று எதிர்பார்ப்பு எகிறி உள்ளது.
கேரள மாநிலத்தை பொருத்தவரை மொத்தமுள்ள 20 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 13 தொகுதிகளிலும், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் இரண்டு தொகுதிகளிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஒரு தொகுதிகளும், கேரளா காங்கிரஸ் ஒரு தொகுதியிலும், மற்றவை ஒரு தொகுதியிலும் முன்னிலை பெற்று வருகின்றனர்.
இதேபோல் ஆந்திரா மற்றும் தெலுங்கானா, கர்நாடகாவிலும் பாஜக கணிசமான தொகுதிகளில் முன்னிலை பெற்று வருகிறது. இந்த முறை தென் மாநிலங்களில் பாஜக 40-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறும் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Lok Sabha Election 2024 Kerala BJP Win