60 தொகுதிகளில் இழுபறி! தவிக்கும் பாஜக - காங்கிரஸ்! இது தான் செம்ம டிவிஸ்ட்! - Seithipunal
Seithipunal


நாடாளுமன்ற மக்களவை பொதுத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை முதல் நடந்து கொண்டிருக்கிறது. மாலை 5 மணி நிலவரப்படி பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சுமார் 295 இடங்களில் முன்னிலை பெற்று வருகிறது. காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் 231 இடங்களை முன்னிலை பெற்று வருகின்றன. மற்ற கட்சிகள் 17 இடங்களில் முன்னிலை பெற்று வருகிறது.

பாஜக பொருத்தவரை 241 இடங்களில் மட்டுமே முன்னிலை பெற்று வருவதால், எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாத நிலை உருவாகியுள்ளது. இப்படியான சூழ்நிலைகள் மாலை 5 மணி நிலவரப்படி பாஜக மற்றும் இண்டி கூட்டணி இடையே சுமார் 60 தொகுதிகளில் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை பெற்று இழுபறி நிலையில் உள்ளது.

இந்த 60-ல் 19 தொகுதிகளில் பெரும் இரண்டு சதவீத வாக்கு வித்தியாசத்தில் தான் பாஜக கூட்டணி முன்னிலை பெற்று வருகிறது. இதேபோல் 15 தொகுதிகளில் இந்தியா கூட்டணி 2% வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளது. 

மேலும் 35 தொகுதிகளில் 5 சதவீத வாக்கு வித்தியாசத்தில் பாஜக கூட்டணியும், 37 தொகுதிகளில் இந்தியா கூட்டணி 5% வாக்கு வித்தியாசத்திலும் முன்னிலை பெற்றுள்ளன. 

குறைந்த வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ள இந்த 60 தொகுதிகளில் இரண்டு கூட்டணி கட்சிகளின் சேர்ந்த வேட்பாளர்கள் யார் வெற்றி பெறுவார்கள் என்ற முடிவு கிட்டத்தட்ட கடைசி சுற்றும் வரை நீடிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Lok Sabha Election 2024 NDA vs INDIAlliance


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->