#BREAKING | மக்களவையை கலைக்க பரிந்துரை - மோடி மீண்டும் பிரதமாக பதவி ஏற்கும் நாள் முடிவானது!
Lok Sabha Election Result 2024 june
நடந்து முடிந்த இந்த மக்களவைப் பொதுத்தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மத்தியில் கூட்டணி ஆட்சி அமைப்பது உறுதி ஆகி உள்ளது.
மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. பாஜக 240 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
மேலும் அதன் கூட்டணி கட்சிகள் 50 இடங்களில் வெற்றி பெற்று உள்ளன. காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை 99 இடங்களிலும், அதன் கூட்டணி கட்சிகள் சுமார் 135 தொகுதிகளிலும் வெற்றி பெற்று உள்ளது.
இந்த தேர்தலை பொருத்தவரை எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், பாஜக தனது கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு மத்தியில் ஆட்சி அமைக்க உள்ளது.
இந்த நிலையில், இன்று காலை 11:00 மணியில் அளவில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, 17 வது மக்களவையை கலைக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
மேலும் மோடி வரும் 8 ஆம் தேதி சனிக்கிழமை மீண்டும் பிரதமாக பதவி ஏற்பார் என்ற தகவலின் வெளியாகியுள்ளது.
முன்னதாக 7 ஆம் தேதி பாஜக ஆளும் மாநில முதல்வர்கள் மற்றும் துணை முதல்வர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.
English Summary
Lok Sabha Election Result 2024 june