#BREAKING | இடத்தை காலி பண்ணுங்க! ராகுல்காந்திக்கு நோட்டீஸ்!
Lok Sabha Housing Committee has given notice to Rahul Gandhi
ஒரு சமூகத்தை அவதூறாக பேசிய வழக்கியில் குற்றவாளி என்று நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்ட காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்திக்கு இரு ஆண்டுகள் சிறைத்தண்டனையும் வழங்கப்பட்டது.
இதன் காரணமாக மக்களவை உறுப்பினர் என்ற தகுதியை ராகுல்காந்தி இழந்தார். அதே சமயத்தில் அவருக்கு 30 நாள் ஜாமின் வழங்கி, வழக்கில் மேல்முறையீடு செய்து நிவாரணம் பெற நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது.
ராகுல்காந்தி தரப்பில் மேல்முறையீடு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டநிலையில், அவரை தகுதிநீக்கம் செய்ய காரணமாக இருந்த சட்டத்தையே ரத்து செய்து உத்தரவிட கோரி, உச்சநீதிமன்றத்தில் வழக்கு மட்டுமே தொடரப்பட்டுள்ளது.
இதற்கிடையே, மக்களவை செயலாளர் ராகுல்காந்தியை தகுதி நீக்கம் செய்து அறிவிப்பை வெளியிட, காங்கிரஸ் கட்சியினர் நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், மக்களவையில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதையடுத்து, தற்போது, அரசு ஒதுக்கிய இல்லத்தை காலி செய்யுமாறு, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு, லோக்சபா வீட்டு வசதிக் குழு நோட்டீஸ் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
English Summary
Lok Sabha Housing Committee has given notice to Rahul Gandhi