வெட்கமே இல்ல... காங்கிரஸ் கட்சியை ஒரே வார்த்தையில் சம்பவம் செய்த பிரதமர் மோடி! - Seithipunal
Seithipunal


பாராளுமன்ற மக்களவை பிரதமர் நரேந்திர மோடி பேசிய போது, மணிப்பூருக்கு நீதி கிடைக்க வேண்டும் எனக்கோரி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவையின் மையப்பகுதிக்கு வந்து குறுக்கிட்டு அமளியில் ஈடுபட்டது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மக்களவையில் குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் போது பிரதமர் மோடி பேசிக் கொண்டிருக்கையில், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மணிப்பூருக்கு நீதி கிடைக்க வேண்டும் எனக்கோரி அவையின் மையப்பகுதிக்கு வந்து குறுக்கிட்டு அமளியில் ஈடுபட்டனர். 

எதிர்க்கட்சியினர் மக்களவையின் மையப் பகுதிக்கு வந்து கோஷங்களை எழுப்பி அமளியில் ஈடுபட்டது மிகவும் கண்டனத்துக்கு உரியது என்று சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார். 

மக்களவையில் பிரதமர் மோடி பேசுகையில், "நாங்கள் இந்திய நாட்டின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு ஆட்சி அமைத்து வருகிறோம்.

வாக்கு வங்கிக்காக மட்டும் இல்லாமல் அனைவருக்கும் நீதி கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஆட்சி செய்து வருகிறோம். ஊழல் நடைபெறாத வகையில் நாங்கள் ஆட்சி செய்தோம். 

வருங்கால தலைமுறையினருக்காக வலிமையான பாரதத்தை உருவாக்க வேண்டும் என்ற இலக்கோடு நாங்கள் ஆட்சி செய்து வருகிறோம். எங்கள் ஆட்சியில் 25 கோடி மக்களை ஏழ்மை நிலையில் இருந்து மீட்டுள்ளோம். வாக்கு வங்கி அரசியலைப் புறக்கணித்துவிட்டு மதச்சார்பின்மையை மக்கள் தேர்வு செய்து வாக்களித்துள்ளனர். 

தேர்தலில் தோல்வியடைந்ததால் சிலருக்கு ஏற்பட்டுள்ள வலிகளை எங்களால் புரிந்துகொள்ள முடிகிறது. காங்கிரஸ் ஆட்சி காலங்களின் போது ஊழல் செய்வதில் மிகப் பெரிய போட்டி நிலவியது. காங்கிரஸ் கட்சியினர் தங்களின் ஊழல்களை வெட்கமே இல்லாமல் ஒப்புக் கொண்டனர்" இவ்வாறு தெரிவித்திருந்தார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Lok Sabha PM Modi condemn to Congress july 2024


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->