அந்த குழந்தை... ராகுல்காந்தியை வச்சு செய்த மோடி! சிரிப்பலையால் அதிர்ந்த மக்களவை! - Seithipunal
Seithipunal


மக்களவையில் இன்று பிரதமர் மோடி சுமார் 2 மணி நேரத்திற்கும் மேல் உரையாற்றி வருகிறார். அதன் சுருக்கம் பின்வருமாறு: "நாடாளுமன்றத்தில் அனைத்து வரம்புகளையும் ராகுல்காந்தி மீறிவிட்டார். மக்களவையில் நேற்று குழந்தைத்தனமாக ராகுல்காந்தி நடந்துகொண்டார். அதன் மூலம் அனுதாபம் தேட பார்த்தார். 

அந்த குழந்தை (ராகுல் காந்தி) தனது 99 மதிப்பெண்களை மிகவும் மகிழ்ச்சியுடன் கொண்டாடி இனிப்பு வழங்கியது. அந்த குழந்தையின் ஆசிரியர் ஒருவர் கூறினார். நீங்கள் 100க்கு '99' மதிப்பெண்கள் எடுக்கவில்லை, '543'க்கு 99-எடுத்து இருக்கிறாய் (அவையில் பாஜக உறுப்பினர்கள் சிரிக்கின்றனர்).

ஆனால், அந்த குழந்தையின் புத்தி'க்கு யார் அதைப் புரிய வைக்க முடியும்? காங்கிரஸ் 100க்கு 99 இடங்களை வாங்கவில்லை. 543க்கு 99 இடங்களை பெற்றுள்ளது என்று. 

வரும் 2029ம் ஆண்டிலும் காங்கிரஸ் கட்சி எதிர்க்கட்சி வரிசையில்தான் இருக்கும். 13 மாநிலங்களில் ஒரு தொகுதியைக் கூட கைப்பற்ற முடியாத ராகுல் காந்தி எப்படி ஹீரோவாக முடியும்?

இந்துக்களை இழிவுபடுத்தும் சதி நடக்கிறது. இந்துக்களை அவமதிப்பதை பொறுத்துக்கொள்ள முடியாது. கூட்டணி கட்சியினர் இந்து மதத்தை அவமதித்த (உதயநிதியின் இந்துமத சனாதானம் குறித்த வெறுப்பு பேச்சை சுட்டிக்காட்டி) பேசிய போது, அந்த கருத்துகளை ஆதரித்தவர் ராகுல் காந்தி.

இந்தியாவில் ஜனநாயகம் தழைக்க இந்து மக்கள் தான் காரணம்”இந்திய மக்களை காங்கிரஸ் கட்சி தவறாக வழிநடத்துகிறது. தேர்தலில் தோல்வி அடைந்தாலும் கொண்டாடுகிறார்கள். வடக்கிற்கு எதிராக தெற்கில் காங்கிரஸ் பேசுகிறது.

தேசத்தை பிளவுபடுத்தும் வதந்திகளை காங்கிரஸ் தொடர்ந்து பரப்பி வருகிறது” எதிர்க்கட்சி வரிசையில் அமர தான் காங்கிரஸ் கட்சிக்கு மக்கள் வாக்களித்துள்ளனர். காங்கிரஸ் ஆட்சியின் போது மக்கள் தங்கள் நம்பிக்கையை இழந்தனர்.

காங்கிரஸ் கட்சி தோல்வியில் சாதனை படைத்துள்ளது” மக்களவைத் தேர்தலில் முதல்முறையாக கேரளாவில் பாஜக எம்.பி. வெற்றி பெற்றுள்ளார். தமிழ்நாட்டில் போட்டியிட்ட பல இடங்களில் 2-வது இடங்களை பெற்றுள்ளோம்.

ஹரியானா, மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் நடைபெறவுள்ள  சட்டமன்ற தேர்தல்களிலும் பாஜக வெற்றி பெறும். 3-வது முறையாக ஆட்சி அமைத்துள்ளோம், 3 மடங்கு வலிமையுடன் செயல்படுவோம்.

அற்ப அரசியலால் நாடு இயங்கவில்லை, மக்களின் ஆசியால் நாடு இயங்குகிறது. காங்கிரஸ் ஆட்சியின் போது பல முறைகேடுகள் நடைபெற்றன”சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்துள்ளோம். ஜம்மு & காஷ்மீர் மக்கள் இழந்த நம்பிக்கையை, மீட்டுக் கொடுத்துள்ளோம். இப்போது ஜம்மு & காஷ்மீரில் ஜனநாயகம் தழைத்தோங்குகிறது. 

மக்களவைத் தேர்தலில் ஜம்மு & காஷ்மீர் மக்கள் அதிகமாக வாக்களித்து உள்ளனர். எனது தலைமையிலான அரசு இந்தியாவை விரக்தியிலிருந்து  மீட்டுள்ளது. 2014ம் ஆண்டுக்கு பிறகு இந்தியாவிற்கு தன்னம்பிக்கை கிடைத்திருக்கிறது. ஊழல் ராஜ்ஜியங்கள் ஒழிக்கப்பட்டுவிட்டன" என்று பிரதமர் மோடி பேசினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Lok Sabha PM Modi speech july 2024


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->