அனல் தெறிக்கும் மக்களவை! வறுத்தெடுக்கும் ராகுல்காந்தி! கொந்தளித்த பிரதமர் மோடி! - Seithipunal
Seithipunal


மக்களவையில் இன்று புதிய குற்றவியல் திருத்த சட்டங்கள் குறித்து எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. பின்னர் அமித்ஷா இதுகுறித்து விவாதம் நடத்த தயார் என்று தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து மக்களவையில் எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசுகையில், "என்னைப் பொறுத்தவரை அதிகாரத்தை விட உண்மைதான் சக்தி வாய்ந்தது. எங்களுக்கு அதிகாரம் முக்கியமில்லை. ஆனால் உங்களுக்கு அப்படி இல்லை. கடந்த 10 ஆண்டுகளில் 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் என் மீது பதிவு செய்யப்பட்டுள்ளன. எனது எம்.பி. பதவியையும், வீட்டையும் பாஜக அரசு பறித்தது.

கடந்த 10 ஆண்டுகளாக கடுமையான தாக்குதலுக்கு அரசியல் சாசனம் உள்ளானது. இந்திய அரசமைப்பு சட்டத்தை பாதுகாக்க காங்கிரஸ் கட்சி தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது" என்றார்.

மேலும், மக்களவையில் இந்து கடவுள் சிவன் புகைப்படத்தை காட்டி பேசிய ராகுல் காந்தி, "சிவனின் இடதுதோள் ஓரமாக திரிசூலம் இருப்பது வன்முறையின் சின்னம் அல்ல. அது அகிம்சையின் சின்னம்.

பிரதமர் மோடி கடவுளின் அவதாரம், கடவுளுடன் நேரடித் தொடர்பில் இருப்பதாகவும், கடவுளுடன் நேருக்கு நேர் பேசிக் கொண்டிருப்பதாகவும், காந்தியை ஆவணப் படம் மூலமே அவரை உலகம் அறிந்ததாகவும் சொல்கிறார். பிரதமர் மோடி  வேண்டுமானால் ஆவணப்படம் மூலம் இதை அறிந்திருக்கலாம்.

உண்மையான இந்து தர்மத்தை பாஜகவினர் பின்பற்றவில்லை. சகிப்புத்தன்மை இல்லாத இந்துக்கள் பாஜகவினர் தான்" என்று ராகுல் காந்தி விமர்சனம் செய்தார்.

ராகுல் காந்தியின் இந்த விமர்சனத்திற்கு பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், பாஜவகவைச் சேர்ந்த அமைச்சர்கள், எம்.பிக்கள் கடும் அமளியில் ஈடுபட்டு வருகின்றர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Lok Sabha PM Modi vs Rahulganthi june 2024


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->