#ExitPoll | கருத்து கணிப்புகளில் தூள் கிளப்பும் பாஜக! இண்டி கூட்டணி நிலை என்ன?!
LokSabha Election 2024 Exit Poll NDA Alliance INDI Alliance
இந்தியாவில் 18-வது மக்களவைக்கான தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி முதல் கட்ட தேர்தல் கடந்த ஏப்ரல் 19-ந்தேதி தொடங்கியதையடுத்து ஏப்ரல் 19, 26, மே 7, 13, 20, 25-ந்தேதிகளில் 6 கட்ட தேர்தல்கள் நடந்து முடிந்த நிலையில் இன்று 7-வது மற்றும் இறுதிக்கட்டத் தேர்தல் வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது..
மேலும், கடந்த ஏப்ரல் மாதம் 19 ஆம் தேதி காலை 7 மணி முதல், வருகின்ற ஜூன் ஒன்றாம் தேதி (இன்று) மாலை 6.30 மணி வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிட தேர்தல் ஆணையம் தடை விதித்திருந்தது.
இந்த தடை சற்றுமுன் முடிந்த நிலையில், தேர்தல் கருத்துக்கணிப்பு முடிவுகளை பல்வேறு தொலைக்காட்சி நிறுவனங்களும் வெளியிட்டு வருகின்றன.
அதன்படி ரிபப்ளிக் பிமார்க் வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பின்படி பாஜக பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சியியை பிடிக்கும் என்று தெரியவந்துள்ளது.
பாஜக கூட்டணி - 359 தொகுதிகள்
காங்கிரஸ் கூட்டணி - 154 தொகுதிகள்
மற்றவை - 30 தொகுதிகள்
ரிபப்ளிக் மேட்ரைஸ் கருத்து கணிப்பு
பாஜக கூட்டணி - 368 தொகுதிகள்
காங்கிரஸ் கூட்டணி - 133 தொகுதிகள்
மற்றவை - 48 தொகுதிகள்
இந்தியா நியூஸ் டி டைனமிக்ஸ் கருத்து கணிப்பு
பாஜக கூட்டணி - 371 தொகுதிகள்
காங்கிரஸ் கூட்டணி - 125 தொகுதிகள்
மற்றவை - 47 தொகுதிகள்
டிவி 5 தெலுங்கு கருத்து கணிப்பு
பாஜக கூட்டணி - 359 தொகுதிகள்
காங்கிரஸ் கூட்டணி - 154 தொகுதிகள்
மற்றவை - 30 தொகுதிகள்
ஜன்கி பாத் கருத்து கணிப்பு
பாஜக கூட்டணி - 362-392 தொகுதிகள்
காங்கிரஸ் கூட்டணி - 141-161 தொகுதிகள்
மற்றவை - 10-20 தொகுதிகள்
English Summary
LokSabha Election 2024 Exit Poll NDA Alliance INDI Alliance