மக்களைவை தேர்தல்: 5ம் கட்ட வாக்குப்பதிவு சதவீதம்! இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவிப்பு.!  - Seithipunal
Seithipunal


நாடு முழுவதும் உள்ள 543 மக்களவைத் தொகுதிகளுக்கும் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. அதன்படி கடந்த மாதம் 19ஆம் தேதி 102 தொகுதிகளுக்கு முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த மாதம் 26 ஆம் தேதி 88 தொகுதிகளுக்கு இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு, கடந்த ஏழாம் தேதி மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு, கடந்த 13ஆம் தேதி 96 தொகுதிகளுக்கு நான்காம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. 

இதனை தொடர்ந்து 8 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 49 தொகுதிகளுக்கு நேற்று 5ஆம் கட்டத் தேர்தல் நடைபெற்றது. உத்தரபிரதேசம் 14 தொகுதிகள், மராட்டியம் 13 தொகுதிகள், மேற்கு வங்கம் 7 தொகுதிகள், பிகார் 5 தொகுதிகள், ஓடிஸா 5 தொகுதிகள், ஜார்கண்ட் 5 தொகுதிகள், ஜம்மு காஷ்மீர் லடாக் ஒரு தொகுதி என மொத்தம் 49 தொகுதிகளுக்கு நேற்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெற்றது. 

இதற்காக மக்கள் நீண்ட வரிசையில் நின்று தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர். இந்நிலையில் ஐந்தாம் கட்ட மக்களவைத் தேர்தலில் 60.48 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

இதில் அதிகபட்ச வாக்குப்பதிவு மேற்கு வங்கத்தில் 76.05% மற்றும் குறைந்தபட்சமாக மராட்டியத்தில் 54.33% வாக்குகள் பதிவாகியுள்ளதாகவும் இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

LokSabha election 5th phase voting percentage


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->