கல்லூரி மாடியில் நெருக்கமாக இருந்த காதலர்கள் - வீடியோவால் பறிபோன உயிர்.! - Seithipunal
Seithipunal


கல்லூரி மாடியில் நெருக்கமாக இருந்த காதலர்கள் - வீடியோவால் பறிபோன உயிர்.!

கர்நாடகா மாநிலத்தில் உள்ள தாவணகெரே நகரில் தனியாருக்கு சொந்தமான கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வரும் மாணவனுக்கும், மாணவிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இந்த பழக்கம் இருவருக்கும் இடையே காதலாக மாறியது. 

இதையடுத்து இருவரும் செல்போனில் அடிக்கடி பேசிக் கொள்வதுடன், தனிமையிலும் சந்தித்து வந்துள்ளனர். இந்த நிலையில் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு காதலர்கள் இருவரும் கல்லூரியின் மொட்டை மாடிக்கு சென்றுள்ளனர். 

கு யாருக்கும் தெரியாமல் இருவரும் நெருக்கமாக இருந்துள்ளனர். இது தொடர்பான வீடியோ கடந்த சில நாட்களுக்கு முன்பு சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த வீடியோவின் படி நடத்தப்பட்ட விசாரணையில் மாணவனும், மாணவியும் நெருக்கமாக இருந்ததை, அருகே உள்ள கட்டிடத்தில் இருந்தவர்கள் செல்போனில் வீடியோ எடுத்து இருப்பதும், அந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதும் தெரிய வந்தது. இதனால் மனம் உடைந்த போன மாணவி தனது வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

இதையறிந்த மாணவனும் உடனே தற்கொலை செய்து கொண்டார். மாணவனும், மாணவியும் சேர்ந்து இருந்த வீடியோ வெளியானதால் தான் அவர்கள் தற்கொலை செய்து கொண்டனர் என்பதால், அவர்களின் குடும்பத்தினர் சார்பில் தனித்தனியாக போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. 

அதன் படி போலீஸார் வழக்குப்பதிவு செய்து இந்த வீடியோவை எடுத்தது யார்?, சமூக வலைதளங்களில் பதிவிட்டது யார்? என்று தீவிரமாக விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

lovers sucide for intimacy vedio released in social media


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->