BREAKING | ம.பி., ஆன்மிக நிகழ்வு: சுவர் இடிந்துவிழுந்து 9 குழந்தைகள் பலி - ஏராளமான குழநைதைகள் படுகாயம்! - Seithipunal
Seithipunal


மத்திய பிரதேச மாநிலத்தில் சுவர் இடிந்து விழுந்ததில் ஒன்பது குழந்தைகள் பலியாகிய பெரும் அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலம், சாகர் பகுதியில் அமைந்துள்ள ஒரு கோவிலின் சுவர் இடிந்து விழுந்ததில், இன்று முற்பகல் 11 மணி அளவில் 9 குழந்தைகள் பலியாகி உள்ளனர். 

ஷாபூரில் உள்ள ஹர்தவுல் பாபா கோவிலின் ஆன்மீக நிகழ்வின் போது, இந்த சுற்றுச்சூழல் இடிந்து விழுந்து உள்ளது. இதனால் அலறி அடித்து ஓடிய பொதுமக்கள் பலரும் படுகாயம் அடைந்தனர். 

மேலும் இந்த விபத்தில் ஒன்பது குழந்தைகள் பலியாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இந்த சுவர் இடிந்த விபத்தில் ஏராளமான குழந்தைகள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் முதல் கட்ட தகவல் வெளியாகி உள்ளது.

சம்பவம் நடந்த இடத்தில் மீட்பு பணி நடந்து வருகிறது. மருத்துவ குழுவினர் வரவேற்கப்பட்டுள்ளனர். மேலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அண்மையில் உத்திரபிரதேசம் மாநிலத்தில் ஒரு ஆன்மீக நிகழ்ச்சியில் கூட்ட நெரிசில் காரணமாக நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், தற்போது மத்திய பிரதேசத்தில் ஒரு ஆன்மீக நிகழ்ச்சியில் ஒன்பது குழந்தைகள் பலியாகி, பல குழந்தைகள் படுகாயம் அடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Madhya Pradesh Baba Temple wall accident 9 babys death


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->