அமைச்சரவில் நுழைந்து, முதல்வரை பேட்டியெடுத்த சிறுமி! வைரலாக வீடியோ! - Seithipunal
Seithipunal


மத்தியப் பிரதேசத்தின் முதல்வர் மோகன் யாதவ் அமைச்சரவை கூட்டத்தில், மாநிலத்தின் சிறு கிராமத்தில் இருந்து வந்த சிறுமி ஒருவர் எடுத்த பேட்டி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த சிறுமி ஒரு youtube சேனல் ஒன்றை நடத்தி வருவதாகவும், அதில் அவர் ஒரு முறையாவது முதல்வரை நேரில் சந்திக்க வேண்டும் என்பதே தனது கனவு என கோரிக்கை வைத்துள்ளார்.

இதுகுறித்து அறிவித்த முதல்வர் மோகன் யாதவ், தனது வீடு, அலுவலகம் மற்றும் தலைமைச் செயலகத்துக்கு அந்த சிறுமியை வரவழைத்து, தன்னுடன் தங்கி வீடியோ எடுக்க அனுமதித்து உள்ளார்.

மேலும், மாநில அமைச்சரவை நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே, அமைச்சரவைக் கூட்டத்தைப் பார்க்கவும், வீடியோ எடுக்கவும், முதலமைச்சரை பேட்டி எடுக்கவும் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

அந்த சிறுமி சிறிதும் பதற்றமில்லாமல் அமைச்சரவை கூட்டத்தில், அமைச்சர்கள் முன்பு, முதலமைச்சரை கேள்விகளால் திணற வைத்துள்ள இந்த காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Madhya Pradesh Cabinet little girl youtuber cm


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->