குழந்தைகளுடன் கிணற்றில் குதித்த பெண்... 4 பேர் பரிதாப பலி! பின்னணியில் திடுக்கிடும் தகவல்.! - Seithipunal
Seithipunal


மத்திய பிரதேசம், பின்பல்ஹடா கிராமத்தை சேர்ந்தவர் ரொடு சிங். இவரது மனைவி சுகுணா பாய் (வயது 40) இவர்களுக்கு அரவிந்த் (வயது 11), அனுஷா (வயது 9), பிட்டு (வயது 6), கார்த்திக் (வயது 3) என 4 குழந்தைகள் உள்ளனர். 

ரொடு சிங்கிற்கும் அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு தகராறு ஏற்படும் போதெல்லாம் ரொடு அவரது மனைவியை தாக்கியுள்ளார். இந்நிலையில் மீண்டும் நேற்று மாலை இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டபோது ரொடு சிங் மனைவியை கடுமையாக தாக்கியதால் மனமுடைந்த சுகுணா தனது 4 குழந்தைகளை அழைத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். 

பின்னர் ஊரில் உள்ள பள்ளிக்கூடத்தில் இரவு முழுவதும் தங்கிய சுகுணா இன்று அதிகாலை கிராமத்தில் உள்ள ஒரு கிணற்றில் 4 பிள்ளைகளுடன் குதித்து தற்கொலை செய்துள்ளார். 

இது குறித்த தகவல் அறிந்த மக்கள் கிணற்றில் குதித்த ஐந்து5 பேரையும் காப்பாற்ற முயற்சி செய்துள்ளனர். இருப்பினும் இந்த சம்பவத்தில் தண்ணீரில் மூழ்கி 4 பிள்ளைகள் பரிதாபமாக உயிரிழந்த விட்டனர். 

உயிருக்கு ஆபத்தான நிலையில் தத்தளித்து கொண்டிருந்த சுகுணாவை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நான்கு குழந்தைகளின் உடல்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கணவன்-மனைவி தகராறில் பிள்ளைகளுடன் மனைவி கிணற்றில் குதித்ததில் 4 குழந்தைகள் உயிரிழந்த  சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Madhya Pradesh four children drown well died


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->