இவங்களுக்கா ஓட்டு போட்டீங்க... பெண்ணை சரமாரியாக தாக்கிய உறவினர்! - Seithipunal
Seithipunal


மத்திய பிரதேசம், பார்கேடா ஹாசன் கிராமத்தில் உறவினர் பா.ஜ.கவிற்கு வாக்களித்ததாக தன்னை அடித்து துன்புறுத்தியதாக பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார். 

கடந்த 4 ஆம் தேதி பா.ஜ.கவிற்கு வாக்களித்ததால் தன்னை மைத்துனர் கடுமையாக தாக்கப்பட்டதாக பெண் ஒருவர் புகார் அளித்தார். 

மேலும் பா.ஜ.கவிற்கு வாக்களித்தது தெரிய வந்ததும் முதலில் திட்டினர் பின்னர் மூங்கில் கம்பால் தொடர்ந்து தாக்கியுள்ளனர். இதில் பெண் வலி தாங்காமல் கத்தி கூச்சலிடவே அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அந்த பெண்ணை காப்பாற்றியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதனை தொடர்ந்து அந்தப் பெண்ணை இனி எங்களது பேச்சைக் கேட்காமல் இருந்தால் கொலை செய்து விடுவோம் எனவும் மிரட்டி உள்ளதாக தெரிவித்துள்ளனர். 

அந்த பெண் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளியை கைது செய்ய உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Madhya Pradesh man beats sister in law


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->