பிரபல சூதாட்ட செயலி வழக்கு : கட்டுக்கட்டாக சிக்கிய கோடிக்கணக்கான பணம்! - Seithipunal
Seithipunal


புதுடெல்லி, துபாயை மையமாகக் கொண்டு செயல்படும் மஹா தேவ் சூதாட்ட செயலியின் தலைவர் சத்தீஸ்கரை சேர்ந்த சவுரப் சந்திரகர், ரவி உப்பல் ஆகியோர் மீது ரூ 5000 கோடி மோசடி செய்ததாக புகார் எழுந்தது. 

இந்த புகார் தொடர்பாக மத்திய அமலாக்கத்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

இந்நிலையில் இந்த செயலியின் தலைவரான சவுரப் சந்திரகர் திருமணம் துபாயில் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்றதை தொடர்ந்து அந்த நிகழ்ச்சியில் பிரபல பாலிவுட் நடிகர்கள் சிலர் கலந்து கொண்டனர். 

அதற்காக ரூ. 200 கோடி வரை செலவு செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. இது குறித்தும் அமலாக்கத்துறையினர்  விசாரணை நடத்தி வருகின்ற நிலையில் திருமண நிகழ்ச்சிக்கு வந்த பாலிவுட் நடிகர்களை அழைத்துச் சென்ற பிரபல மேலாளர்களின் வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை சோதனையில் ஈடுபட்டனர். 

மும்பை மற்றும் டெல்லியில் உள்ள மேலாளர்களின் வீட்டில் சோதனை நடத்தியதில் இரண்டரை கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

இந்த பணம் ஹவாலா பணமாக இருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது. இது குறித்து அமலாக்கத்துறையினர்  சம்பந்தப்பட்ட மேலாளர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mahadev betting app seized 2 crore


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->