மூன்றாம் உலகப் போர் தொடங்கிவிட்டது - உக்ரைன் அதிர்ச்சி தகவல்! - Seithipunal
Seithipunal


2024-ம் ஆண்டு மூன்றாம் உலகப் போர் தொடங்கிவிட்டதாக உக்ரைன் முன்னாள் ராணுவ தளபதி வலேரி ஜலுஷ்னி தெரிவித்துள்ளார்.

உக்ரைன் முன்னாள் ராணுவ தளபதியும், இங்கிலாந்திற்கான தற்போதைய உக்ரைன் தூதருமான வலேரி ஜலுஷ்னி தெரிவித்துள்ளதாவது, ரஷியா-உக்ரைன் மோதலில் ரஷியாவின் நட்பு நாடுகள் நேரடியாக போரில் ஈடுபட்டிருப்பது மூன்றாம் உலகப் போர் தொடங்கிவிட்டது என்று அர்த்தம் என்று பொலிட்டிகோ செய்தி வெளியிட்ட நிலையில், 2024-ம் ஆண்டு மூன்றாம் உலகப் போர் தொடங்கிவிட்டதாக தெரிவித்துள்ளார்.

மேலும், வட கொரிய ஆயதக்குழுக்களைச் சேர்ந்த 10,000 வீரர்கள் குர்ஸ்க் பகுதியில் நிலைநிறுத்தியிருப்பதாகவும், உக்ரைனுக்கு எதிராக ஈரானின் டிரோன்கள் மற்றும் பிற அதிநவீன ஆயுதங்களை பயன்படுத்துவதாக கூறினார்.  

இதே போல் உக்ரைனின் ஆதரவாளர்கள் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், நாட்டின் எல்லைகளுக்கு அப்பால் போர் ஏற்படுவதைத் தடுக்க வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.  
ஆனால் உக்ரைன் போரை நிறுத்துவதுகூட இன்னும் சாத்தியம்தான் என்று கூறிய அவர், சில காரணங்களால், தங்கள் ஆதரவாளர்கள் இதை புரிந்து கொள்ள விரும்பவில்லை என்று  தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

World war III has begun ukraine shocking information


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->