மகாராஷ்டிராவின் ஒரு கிராமம் கூட கர்நாடகாவுக்குச் செல்லாது - முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே.!
maharastra chief minister eknath shinde press meet for karnataka border problam
பல ஆண்டுகளுக்கும் மேலாக கர்நாடகா மற்றும் மகாராஷ்டிராவிற்கு இடையே உள்ள பெலகாவி எல்லை பிரச்சினை நீடித்து வருகிறது. இதுவரைக்கும் பெலகாவியை மகாராஷ்டிரா மாநிலம் தான் சொந்தம் கொண்டாடி வருகிறது.
இந்த எல்லை பிரச்னை தொடர்பாக கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு நிலுவையில் உள்ள போது, இந்த எல்லை பிரச்சினை இரு மாநிலங்களுக்கிடையே மீண்டும் எழுந்துள்ளது.
இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தின் ஒரு அடி இடத்தைக் கூட யாருக்கும் வீட்டுக் கொடுக்க மாட்டோம் என்று மாநில முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே உறுதிபட தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்ததாவது:-
"மகாராஷ்டிரா மாநிலத்தின் எல்லையை பாதுகாக்கும் விவகாரத்தில், மாநில அரசு உறுதியாக உள்ளது. இதன் காரணமாக மாநிலத்தின் ஒரு அடி நிலம் கூட யாருக்கும் வீட்டுக் கொடுக்க மாட்டோம்.
இரு மாநிலத்தின் எல்லை பிரச்சினை குறித்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் உள்ளது. தற்போது வரை அந்த பிரச்சினைக்கு தீர்வு காணவில்லை. மகாராஷ்டிரா மாநிலத்தின் ஒரு கிராமம் கூட கர்நாடகாவுக்கு செல்லாது" என்று தெரிவித்தார்
English Summary
maharastra chief minister eknath shinde press meet for karnataka border problam