கொலை வழக்கில் கைதான உதவியாளர் - பதவியை ராஜினாமா செய்த மகாராஷ்டிரா அமைச்சர்.!
maharastra minister Dhananjay Munde resign
மகாராஷ்டிரா மாநிலத்தின் பீட் மாவட்டம் மசாஜோ கிராமத்தில் மும்பையை சேர்ந்த காற்றாலை மின் உற்பத்தி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. அந்த நிறுவனத்திடமிருந்து பணம் பறிக்கும் நோக்கில் மாநிலத்தின் உணவுத்துறை அமைச்சராக தனஞ்செய் முண்டேவின் உதவியாளர் வாலிமிக் கரட் மிரட்டல் விடுத்து வந்துள்ளார்.
இதனை பஞ்சாயத்து தலைவர் சந்தோஷ் தேஷ்முக் தட்டிக்கேட்டுள்ளார். இதனால், வாலிமிக் தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து சந்தோஷ் தேஷ்முக்கை கடத்தி கொடூரமாக கொலை செய்து விட்டு, வாலிமிக் போலீசில் சரணடைந்தார். அவரை போலீசார் கைது செய்த நிலையில் இந்த சம்பவம் குறித்த பல்வேறு தகவல் தற்போது விசாரணையில் தெரியவந்துள்ளது.
அதுமட்டுமல்லாமல், சந்தோஷ் தேஷ்முக் கொடூரமாக தாக்கப்பட்டது தொடர்பான புகைப்படங்களும், வீடியோக்களும் சமூகவலைதளத்தில் வைரலாகின. இந்த சம்பவத்தில் அமைச்சர் தனஞ்செய் முண்டேவுக்கு தொடர்பு இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டின. அவரிடம் விசாரணை நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றன.
இந்த நிலையில், பஞ்சாயத்து தலைவர் சந்தோஷ் தேஷ்முக் கொலை வழக்கில் தனஞ்செய் முண்டே உணவுத்துறை அமைச்சர் பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார். தனது ராஜினாமா கடிதத்தை தனஞ்செய் முண்டே முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிசுக்கு அனுப்பி வைத்துள்ளார்.
English Summary
maharastra minister Dhananjay Munde resign