இந்திய ராணுவம் காணாத பேரழிவு! பலி எண்ணிக்கை நினைத்து பார்க்காத அளவுக்கு இருக்கும் - வினோத் மேத்யூ! - Seithipunal
Seithipunal


இது போன்ற ஒரு பேரழிவை இந்திய ராணுவம் பார்த்ததில்லை என மேஜர் ஜெனரல் வினோத் மேத்யூ தெரிவித்துள்ளார்.

கேரளா மாநிலத்தில் ஒரு வார காலமாக பெய்து வந்த பலத்த மழை காரணமாக மேட்டுப்பட்டி, சூரல்மழை, முண்டைக்கை உள்ளிட்ட பகுதிகளில் அடுத்தடுத்து நிலச்சரிவு400க்கும் மேற்பட்ட குடும்பங்கள் சிக்கி உள்ளதாக தகவல் வெளியாகி நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

இந்தநிலையில் கேரள மாநிலம் வயநாட்டில் நிலச்சரிவில்  சிக்கி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 316 ஆக உயர்ந்துள்ள சம்பவம் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் மீட்டு குழு மாயமானவர்களை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் இதுகுறித்து பேசிய மேஜர் ஜெனரல் வினோத் மேத்யூ, வயநாட்டில் ஏற்பட்ட நிலை சரிவு நம் நாடு கண்ட மிகப்பெரிய பேரழிவாகும். இந்திய ராணுவம் இதுவரை இப்படி ஒரு மோசமான பேரழிவை பார்த்ததில்லை.

பலியானவர்கள் எண்ணிக்கை நாம் நினைத்து பார்ப்பதை விட மிக அதிகமாக இருக்கும். பல இடையூறுகள் இருந்த போதிலும் நம் ராணுவ சிறப்பாக செயல்பட்டு மீட்பு பணிகளையும் மேற்கொண்டு வருகிறது.

பூஞ்சேரிமட்டம் பகுதியில் நிலசரிவு அபாயம் காரணமாக மக்கள் வெளியேற்றப்பட்டனர். துரதிஷ்டவசமாக 20 பேர் அங்கே சிக்கிக் கொண்டனர். அவர்களை ராணுவ வீரர்கள் மிகவும் செங்குத்தான பாதையை தாண்டி 20 பேரையும் மிகவும் சாதகமாக மீட்டனர். என்று தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Major General Vinod Mathew said that the Indian Army had never seen such a disaster


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->