பிரதமரை பாம்புடன் ஒப்பிட்ட கார்கே - கொந்தளிப்பில் பாஜகவினர்.!  - Seithipunal
Seithipunal


பிரதமரை பாம்புடன் ஒப்பிட்ட கார்கே - கொந்தளிப்பில் பாஜகவினர்.! 

கர்நாடகா மாநில சட்டசபைக்கு வரும் 10ம் தேதி  தேர்தல் நடைபெற உள்ளதால் மாநிலம் முழுவதும் தேர்தல் பிரசாரம் தீவிரமடைந்துள்ளது. இந்த பிரச்சாரத்தில் ஆளுங்கட்சியான பாஜகவை காங்கிரஸ் கட்சியினர் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். 

அந்த வகையில், காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, கடாக் மாவட்டம் ரான் பகுதியில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடியை விஷப்பாம்புடன் ஒப்பிட்டு பேசியுள்ளார். இது பாஜகவினரிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல், கார்கேவுக்கு தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இதற்கிடையே கார்கே பேசிய வீடியோவை பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் அமித் மால்வியா தனது டுவிட்டரில் பகிர்ந்து கண்டனம் தெரிவித்துள்ளார்.

அதில், 'காங்கிரஸ் தலைவர் கார்கே, பாஜக பாம்பு போன்றது என்றும், அந்த கட்சியின் சித்தாந்தம் விஷம் போன்றது என்றும் அந்த சித்தாந்தத்தை ஆதரித்தால் மரணம் நிச்சயம் என்றும் அவர் பேசியுள்ளார்.

இதற்கு பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதைத்தொடர்ந்து கார்கே செய்தியாளர்களிடம் பேசுகையில், நான் மோடிக்கு எதிராக பேசவில்லை என்று கூறியுள்ளார். இது பாஜகவினரை மேலும் கோப படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mallikarjun karke speach karnataka election campaign


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->