வீடு திரும்பிய மம்தா பானர்ஜி.! தொடர் கண்காணிப்பில் சிகிச்சை!
Mamata Banerjee returned home
மேற்கு வங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, நேற்று நெற்றியில் காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று வீடு திரும்பினார்.
கொல்கத்தா, காளிகாட் பகுதியில் உள்ள தனது வீட்டில் மம்தா பானர்ஜி தவறி விழுந்து காயமடைந்ததாக நெற்றியில் ரத்த காயத்துடன் புகைப்படங்களும் கட்சியின் எக்ஸ் வலைதளத்தில் வெளியிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் மம்தா பானர்ஜி சிகிச்சை முடிந்து இன்று வீடு திரும்பியுள்ளார். மேலும் அவர் மருத்துவர்கள் கண்காணிப்பில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Mamata Banerjee returned home