மோடி வழிகாட்டுதல்படி தேர்தல் ஆணையம் நடக்கிறது: மம்தா பானர்ஜி பரபரப்பு குற்றசாட்டு! - Seithipunal
Seithipunal


மேற்குவங்கம், ஹூப்ளி மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் பேசிய மம்தா பானர்ஜி, தேர்தல் ஆணையம் பாஜகவுக்காக இரண்டரை மாதங்களாக வாக்குப்பதிவு நடத்துகிறது. இதனால் சாதாரண பொது மக்கள் சந்திக்கும் பிரச்சனைகளை அவர் உணர்ந்திருக்கிறார்களா என கேள்வி எழுப்பி உள்ளார். 

இதுகுறித்து அவர் பேசியிருப்பதாவது, பிரதமர் மோடி வழிகாட்டுதல் படி தேர்தல் ஆணையம் செயல்படுகிறது. பிரதமர் மோடி 70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு ஆயுஷ்மான் பாரத் யோஜனா திட்டத்தை விரிவுபடுத்த அறிவித்ததன் மூலம் தேர்தல் நடத்தை விதிகளை மீறி உள்ளார். 

பா.ஜ.க மக்களவைத் தேர்தலில் 400 இடங்களை எட்டுமா என்பது சந்தேகம். பா.ஜ.க 400 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என தெரிவிக்கிறது. ஆனால் இந்த முறை அது நடக்காது. 

மத்தியில் ஆட்சி அமைக்க இந்தியா கூட்டணிக்கு ஆதரவு தெரிவிப்போம். மேற்கு வங்காளத்தில் குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய கொடிமக்கள் பதிவேடு சட்டம் போன்றவற்றை அமல்படுத்த முடியாது என தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mamata Banerjee says Election Commission directed Modi


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->