மத்திய அரசுக்கு கெடு விதித்த மம்தா பானர்ஜி: எதற்காக தெரியுமா? - Seithipunal
Seithipunal


மேற்கு வங்கம், மத்திய அரசு பல்வேறு திட்டங்களுக்கான நிதியை ஒதுக்காமல் நிலுவை வைத்துள்ளது. இது குறித்து கடந்த டிசம்பர் மாதம் 20ஆம் தேதி மம்தா பானர்ஜி டெல்லி சென்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார். 

அப்போது நிலுவையில் உள்ள நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தினார். ஆனால் ஒரு மாத காலம் ஆகியும் மத்திய அரசு நிலுவையில் உள்ள நிதியை விடுவிக்காததால் மத்திய அரசுக்கு மம்தா பானர்ஜி 7 நாள் கெடு விதித்துள்ளார். 

நேற்று குடியரசு தினத்தன்று மம்தா பானர்ஜி, நிலுவையில் உள்ள நிதியை மத்திய அரசு விடுவிக்கவில்லை என்றால் நாங்கள் மிகப் பெரிய போராட்டத்தை தொடங்குவோம் என தெரிவித்துள்ளார். 

மத்திய மற்றும் மாநில அரசுகள் நாட்டில் பல்வேறு திட்டங்களை இணைத்து செயல்படுத்துகிறது. மத்திய அரசு செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கு குறிப்பிட்ட நிதியையும், மாநில அரசு செயல்படுத்தும் திட்டங்களுக்கு குறிப்பிட்ட நிதியையும் ஒதுக்கும். 

அந்த வகையில் மத்திய அரசு ரூ. 19 ஆயிரம் கோடி ரூபாய் மேற்கு வங்காளத்திற்கு ஒதுக்கீடு செய்யாமல் நிலுவையில் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mamata Banerjees ultimatum central Govt


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->