நிதி ஆயோக் கூட்டம் - என்னோட மைக்க ஆஃப் பண்ணிட்டாங்க.. மம்தா விளக்கம்.!
mamtha banarji explain out walk of niti ayog meeting
நடப்பு நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் இந்தியா கூட்டணி ஆட்சி செய்யும் தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களின் பெயர் கூட வாசிக்கப்படவில்லை. இதனால் எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்ததுடன் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதற்கிடையே, இன்று டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் மாநில முதலமைச்சர்கள் கலந்துகொள்ளும் நிதி ஆயோக் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தை புறக்கணிப்பதாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில முதலமைச்சர்கள் பலர் புறக்கணித்துள்ளனர். ஆனால் மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜி இந்த நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொண்டார்.
இந்த நிலையில், மம்தா பானர்ஜி நிதி ஆயோக் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், "எதிர்க்கட்சிகளில் இருந்து ஒரே முதலமைச்சராக பங்கேற்ற எனக்கு முழுமையாக பேச வாய்ப்பு அளிக்கப்படவில்லை.
எனக்கு முன்பு பேசியவர்கள் இருபது நிமிடங்கள் வரை பேச அனுமதிக்கப்பட்டார்கள். ஆனால் ஐந்து நிமிடம் மட்டும் தான் எனக்கு பேச அனுமதிக்கப்பட்டது. மேற்கு வங்காளத்திற்கு மத்திய அரசின் நிதி வழங்கப்படாததை குறித்து நான் பேசி கொண்டிருக்கும் போதே என்னுடைய மைக்கை ஆஃப் செய்து என்னை அவமதித்துவிட்டார்கள்" என்று தெரிவித்தார்.
English Summary
mamtha banarji explain out walk of niti ayog meeting