மலை பாம்பை துண்டு துண்டாக வெட்டி ஸ்பெஷல் டிஸ்! வாலிபர் கைது! - Seithipunal
Seithipunal


கேரளா மாநிலத்தில் மலை பாம்பை கொன்று சமைத்து சாப்பிட்டவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கேரளா மாநிலம் பாலக்காடு தளியகோணம் பகுதியில் ஒருவர் மலைப்பாம்பு பிடித்து சென்றிருப்பதாக வனத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. மலைப்பாம்பை பிடித்து சென்ற அந்த நபர் அதே பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் என்பது தெரியவந்துள்ளது.

அதனையடுத்து உடனடியாக வனத்துறை அதிகாரிகள் ராஜேஷ் வீட்டுக்கு சென்று சோதனை செய்துள்ளனர். அப்போது ராஜேஷ் வீட்டில் இல்லை என்று கூறப்படுகிறது. அதன் பின்னர் அந்த பகுதியை சேர்ந்த கவுன்சிலர் முன்னிலையில் வனத்துறை சோதனை செய்தனர்.

இதில் ராஜேஷ் வீட்டின் சமையலறையில் மலைபாம்பு சமைக்கப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த வனத்துறையினர் பாம்பு இறைச்சியை கைப்பற்றினார்கள்.

இது தொடர்பாக அதே பகுதியில் பதுங்கி இருந்த ராஜேஷை கைது செய்து விசாரித்துள்ளனர். தளியகோணம் பகுதியில் மலை பாம்பை பிடித்து அதனை வைத்து ஸ்பெஷல் டிஸ் தயாரித்ததாகவும் ராஜேஷ் முதற்கட்ட விசாரணையில் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

கேரளா மாநிலம்  தளியகோணம் பகுதியில் மலை பாம்பை பிடித்து சமைத்து சாப்பிட்ட நபர் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அப்பகுதி பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Man arrested after killing and cooking mountain snake in Kerala state


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->