மும்பை விமான நிலையம் : போலி சான்றுடன் தென்னாப்பிரிக்கா செல்ல முயன்ற நபர்கைது.! - Seithipunal
Seithipunal


மும்பை விமான நிலையம் : போலி சான்றுடன் தென்னாப்பிரிக்கா செல்ல முயன்ற நபர்கைது.!

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை விமான நிலையத்திலிருந்து தென்னாப்பிரிக்காவுக்கு செல்ல நேபாளத்தை சேர்ந்த பயணி ஒருவர் விமான நிலையத்திற்கு  வந்துள்ளார். அப்போது குடியுரிமை அதிகாரிகள் அவரது ஆவணங்களை ஆய்வு செய்தபோது அவரிடம் நேபாள நாட்டின் கடவுசீட்டு இருந்தது. 

மேலும், அவர் தென்னாப்பிரிக்கா செல்வதற்கு டெல்லியில் உள்ள நேபாள நாட்டின் தூதரகத்தில் தடையில்லா சான்று பெற்று இருந்தார். அந்த சான்றிதழின் நம்பகத்தன்மையில் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. 

இதனால், அதிகாரிகள் தடையில்லா சான்று குறித்து டெல்லியில் உள்ள நேபாள தூதரகத்தை தொடர்பு கொண்டு பேசினர். அப்போது அந்த பயணி வைத்திருப்பது போலியான தடையில்லா சான்றிதழ் என்பது தெரியவந்தது. 

அதன் பின்னர் அதிகாரிகள் போலி ஆவணம் மூலம் வெளிநாடு செல்ல முயன்ற நேபாள நாட்டைச் சேர்ந்த அந்த நபரை கைது செய்தனர். மேலும், அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

man arrested for fake document in mumbai airport


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->