கள்ளநோட்டுகளை டெபாசிட் செய்ய முயன்ற நபர் - கையும் களவுமாக பிடித்த போலீசார்.!
man arrested for fake money deposit in maharastra
மஹாராஷ்டிராவில் கள்ளநோட்டுகளை வங்கியில் டெபாசிட் செய்ய முயன்ற நபர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தில் உள்ள கடாவ்லி பகுதியை சேர்ந்த 48 வயது நபர் ஒருவர், அந்தப்பகுதியில் உள்ள ஒரு கூட்டுறவு வங்கிக்கு கடந்த 3-ந்தேதி பணத்தை டெபாசிட் செய்வதற்காக சென்றுள்ளார்.
அங்கு அந்த நபர் 500 ரூபாய் நோட்டுகளாக மொத்தம் ரூ.45 ஆயிரத்தை வங்கியில் டெபாசிட் செய்வதற்காக கொடுத்துள்ளார். இதை வாங்கிய அதிகாரிகள் பணத்தை சரிபார்த்த போது அந்த நபர் கொடுத்த பணம் கள்ளநோட்டு என்பது தெரியவந்தது.
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த வங்கி ஊழியர்கள் சம்பவம் குறித்து போலீசாருக்குத் தகவல் அளித்தனர். உடனே சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அந்த நபரை கையும் களவுமாக பிடித்தனர்.
பின்னர் வங்கி அதிகாரிகள் கொடுத்த புகாரின் பேரில் அந்த நபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, கள்ளநோட்டுகளை அவர் எங்கிருந்து வாங்கி வந்தார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்தச் சம்பவத்தால் வங்கியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
English Summary
man arrested for fake money deposit in maharastra