ஏடிஎமில் பணம் திருட்டு.! மும்பையில் அடித்த அபாய ஒலியால் வியாசர்பாடியில் சிக்கிய மர்ம நபர்.! - Seithipunal
Seithipunal


ஏடிஎமில் பணம் திருட்டு.! மும்பையில் அடித்த அபாய ஒலியால் வியாசர்பாடியில் சிக்கிய மர்ம நபர்.!

சென்னையில் உள்ள வியாசர்பாடி எஸ் எம் நகர் பகுதியில் மத்திய அரசு வங்கிக்குச் சொந்தமான ஏடிஎம் மையம் செயல்பட்டு வருகிறது. இந்த ஏடிஎம் மையத்தில் நேற்று நள்ளிரவு அடையாளம் தெரியாத நபர் ஒருவர் புகுந்து  ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணத்தை திருட முயன்றுள்ளார்.

அப்போது, மும்பையில் உள்ள எஸ்பிஐ வங்கி ஏடிஎம் கட்டுப்பாட்டு மையத்தில் அபாய ஒலி அடித்தது. இதனால் சுதாரித்துக் கொண்ட அதிகாரிகள் உடனே கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். அதில் ஒருவர் ஏடிஎம் இயந்திரத்தை உடைப்பது தெரியவந்தது.‌ உடனே அதிகாரிகள் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர்.

அந்தத் தகவலின் படி வியாசர்பாடி இரவுநேர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்துச் சென்று அங்கு ஏடிஎம் இயந்திரத்தை உடைத்துக் கொண்டிருந்த மர்மநபரை கையும் களவுமாக பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.

பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில் அவர், ராயபுரம் முனியப்பன் தெருவைச் சேர்ந்த வெங்கட்ராமன் என்பதும், இவர் பல்வேறு குற்றச்சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதும் தெரிய வந்தது. இது தொடர்பாக  போலீஸார் வழக்குப் பதிந்து வெங்கட்ராமனை கைது செய்தத்துடன் ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க பயன்படுத்திய ஆயுதத்தையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

man arrested for money theft in viyasarpadi atm


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->