பெங்களூரு || தங்கையை தொந்தரவு செய்த ஆத்திரம் - சக நண்பரை கொலை செய்த வாலிபர்.!
man arrested for murder in karnataga
கர்நாடகா மாநிலத்தில் உள்ள பெங்களூரு ராமநகர ரயில் நிலையத்தில் உள்ள தண்டவாளத்தில் உடல் சிதைந்த நிலையில் நேற்று முன்தினம் வாலிபர் சடலம் கிடைத்து. இந்த சம்பவம் தொடர்பாக ரயில்வே போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது, அடிபட்ட வாலிபரிடம் ஒரு தொலைபேசி எண் இருந்தது.
இதை வைத்து போலீஸார் விசாரணை நடத்தியதில், இறந்தது ராமங்கராவைச் சேர்ந்த அர்பாஸ் பாஷா என்பதும், ராமநகரில் உள்ள ஒரு பட்டுப் பண்ணையில் தினசரி கூலித் தொழிலாளியாக வேலை செய்ததும் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தியதில், வாலிபர் இறந்து கிடந்த இடத்தில் ரத்தக்கறை படிந்த ஒரு கான்கிரீட் செங்கல் இருந்துள்ளது. அதில் ரத்தக்கறை இருந்துள்ளது. இதனால் போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து, போலீசார் அர்பாஸ் பாஷாவிடம் இருந்த தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொண்ட போது, அந்த எண் அவருடன் பணிபுரியும் நண்பன் கலு என்ற ஜாஹீரினுடையது என்பது தெரிய வந்தது. உடனே போலீஸார் அவரிடம் விசாரணை நடத்திய போது, அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியானது.
அதாவது, கல்லூரி செல்லும் தனது தங்கையை அர்பாஸ் பாஷா அடிக்கடி வழிமறித்து தொந்தரவு செய்ததுடன் ஜாஹீரின் தாயாரையும் மோசமாக பேசியுள்ளார்.ஆறு ஆண்டுகளாக பழகிய தனது நண்பன் இப்படி செய்வதைப் பொறுத்துக்கொள்ள முடியாமல், தன்னுடைய நண்பருடன் சேர்ந்து அர்பாஸ் பாஷாவை கொலை செய்ய ஜாஹீர் முடிவு செய்துள்ளார்.
இதன்படி ஜனவரி 21-ம் தேதி ராமநகர ரயில் நிலையத்தில் அவரை அடித்துக் கொலை செய்து தண்டவாளத்தில் போட்டு விட்டு விபத்து போல செட்டப் செய்ததாக ஜாஹிர் தெரிவித்துள்ளார். இதைக்கேட்டு அதிர்ந்து போன போலீசார் ஜாஹீர், இலியாஸ் உள்ளிட்டோரைக் இன்று கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
English Summary
man arrested for murder in karnataga