திருட வந்த இடத்தில் அசந்து தூங்கிய வாலிபர் - போதைப்பொருளுடன் சிக்கிய சம்பவம்.! - Seithipunal
Seithipunal


ஹரியானா மாநிலத்தில் உள்ள பரிதாபாத் பகுதியைச் சேர்ந்தவர் ரவி. இவர் நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் தனது ஈகோ மாடல் காரை பார்க்கிங் செய்துவிட்டு தூங்குவதற்காகச் சென்றார். இந்த நிலையில், ரவி நேற்று காலை காரை சுத்தம் செய்வதற்காக வந்துள்ளார்.

அப்போது, காரின் கதவு உடைக்கப்பட்டு இருந்துள்ளது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த ரவி பதறி அடித்துக்கொண்டு காருக்குள் பார்த்தபோது, ஒரு நபர் தூங்கிக் கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.

பின்னர் இந்த சம்பவம் குறித்து ரவி போலீசாருக்கு தகவல் அளித்தார். அதன் படி அங்கு விரைந்து வந்த போலீசார் அந்த நபரை கைது செய்து அவரிடம் இருந்த போதைப்பொருளையும் பறிமுதல் செய்தனர்.

இதையடுத்து போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், அந்த நபர் காரைத் திருட வந்ததும், போதையில் காருக்குள் தூங்கியதும் தெரிய வந்தது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

man arrested for steal car in hariyana


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->