மணிப்பூர் பெண்களுக்கு அரங்கேறிய கொடூரம்! முக்கிய குற்றவாளி கைது!! - Seithipunal
Seithipunal


மணிப்பூர் கலவரத்தின் போது பெண்களை ஆடையின்றி ஒரு கும்பல் அழைத்துச் சென்ற நிலையில் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக மணிப்பூர் காவல்துறையினர் அளித்துள்ள விளக்கத்தில் கடந்த மே 4ம் தேதி இந்த கொடூர சம்பவம் அரங்கேறி உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக புகார் பெறப்பட்டு இரண்டு வாரங்களுக்குள் விசாரணை நடத்தி முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் சாட்சியம் அளித்துள்ளனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான ஹேராதாஸ் என்பவரை காவல்துறையினரால் கைது செய்துள்ளனர். இரண்டு பழங்குடியினப் பெண்களை நிர்வாணமாக அணிவகுத்துச் சென்ற முக்கிய குற்றவாளி ஹேராதாஸ் தௌபல் மாவட்டத்தில் இருந்து குய்ரம் ஹெராதாஸ் கைது செய்யப்பட்டார். குற்றத்தில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்ய மாநில காவல்துறை 12 சிறப்பு போலீஸ் குழுக்களை அமைத்துள்ளதாக மணிப்பூர் போலீசார் தெரிவித்துள்ளனர்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Man arrested in connection with violence against women in Manipur


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->