மகாராஷ்டிரா || மசாஜ் செய்ய மறுத்த தந்தை - ஆத்திரத்தில் மகன் செய்த கொடூரம்.! - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நாக்பூர் நகரில் நவாப்புரா பகுதியை சேர்ந்தவர் தத்தாத்ரேயா ஷெண்டே. இவருக்கு பிரணவ் மற்றும் குஷால் ஷெண்டே என்று இரண்டு மகன்கள் உள்ளனர்.

இந்த நிலையில், மகன் குஷால் தந்தை தத்தாத்ரேயாவிடம் தனது கால் பாதத்தில் மசாஜ் செய்து விடும்படி தெரிவித்துள்ளார். ஆனால், அவர் அதற்கு மறுப்பு தெரிவித்திருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த குஷால் தனது தந்தையை கடுமையாக தாக்க தொடங்கியிருக்கிறார்.

அவரை தடுக்க மூத்த மகன் பிரணவ் முயன்றிருக்கிறார். ஆனால், அவரையும் குஷால் மிரட்டியுள்ளார். இதனால், பயந்து போன பிரணவ், பக்கத்து வீட்டுக்காரர்களிடம் உதவி கேட்பதற்காக ஓடியிருக்கிறார். பின்னர் மீண்டும் வீட்டுக்கு திரும்பியபோது, அவருடைய தந்தை படுகாயங்களுடன் தரையில் சுயநினைவின்றி கிடந்துள்ளார்.

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பிரணவ் உடனடியாக தனது தந்தையை மேயோ மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் வழியிலேயே அவர் உயிரிழந்து விட்டார் என்றுத் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார் கொலை செய்த குற்றச்சாட்டின் பேரில் குஷாலை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அங்கு நீதிபதி குஷாலை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிட்டார். அதன் படி போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

man arrested kill father in maharastra


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->