டவர் உச்சியில் நின்று நடனம்... போலீசுக்கு தண்ணி காட்டிய நபரால் பரபரப்பு..! - Seithipunal
Seithipunal


உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள நொய்டாவில் செக்டார் 76 பகுதியில் செல்போன் டவரின் மீது ஏறி உச்சியில் நின்றபடி நடனமாடிய நபரின் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் நபர் ஒருவர் செல்போன் டவர் மீது ஏறி நடனமாடியது இருந்தது. இதனை பார்க்க அங்கு மக்கள் கூட்டம் கூடியது. அவர்களில் சிலர் அந்த நபரை வீடியோ எடுத்தும் படம் பிடித்தும் கொண்டிருந்தனர். 

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து நேரில் வந்த மின்சாரத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் அந்த நபரிடம் நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடத்தி வரை கீழே இறக்க முயன்றனர். ஆனால் அந்த நபர் கீழ் இறங்குவதற்கு முதலில் மறுத்துள்ளார். 

இதையடுத்து போலீசார் உங்களின் அனைத்து பிரச்சனைகளையும் நாங்கள் தீர்த்து வைக்கிறோம் என கூறி சுமார் 2 மணி நேரம் போராடி அவரை கீழே இறங்கச் செய்தனர். தொடர்ந்து போலீசார் அந்த நபர் மனநலம் பாதிக்கப்பட்டவரா? அல்லது குடிபோதையில் இருந்தாரா? என்பது குறித்து ஆராய்ந்து வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

man dance on top of cell phone tower in uttar pradesh


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->