ஆன்லைன் மோசடி - ரூ.15 லட்சத்தை இழந்து கதறும் வாலிபர்.! - Seithipunal
Seithipunal


இணையதளம் மூலமாக அதிகளவில் மோசடிகள் நடந்து வருகின்றது. அதிலும் குறிப்பாக யூடியூப் வீடியோக்களை பார்த்தால் பணம், லைக் செய்தால் பணம், வீடியோவில் வரும் விளம்பரங்களை பார்த்தால் பணம் என்று ஆன்லைனில் பகுதி நேர வேலையாக அளிப்பதாக கூறி ஏமாற்றி வருகின்றனர். இதில், ஏராளமானோர் பணத்தை இழந்து வருகின்றனர்.

இந்த நிலையில், டெல்லி கரவால் நகரில் வசிக்கும் நபர் ஒருவர், ஆன்லைன் மூலம் வீட்டில் இருந்தே வேலை பார்க்கும் வாய்ப்பை வழங்குவதாக கூறி மோசடி கும்பலிடம் ரூ.15 லட்சத்தை இழந்துள்ளார். இது குறித்து அவர் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார். அதில் அவர் தெரிவித்து இருப்பதாவது:-

"எனது வாட்ஸ்அப் எண்ணுக்கு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், வீட்டில் இருந்தே ஆன்லைன் மூலம் வேலை பார்க்கலாம் என்றும், வீடியோக்களை பார்த்து மதிப்பாய்வு செய்தால் ஒரு வீடியோவுக்கு 50 ரூபாய் தருவதாகவும் தெரிவித்தார்.

அதனை உண்மை என்று நம்பிய நான் அவர்கள் குறிப்பிட்ட மூன்று வீடியோக்களை பார்த்து மதிப்பாய்வு செய்தேன். அதற்கான பணம் ரூ.150ஐ எனது வங்கி கணக்கிற்கு உடனே அனுப்பினர். பணம் கிடைத்ததால் அந்த கம்பெனி போலியானது அல்ல என்று நினைத்தேன்.
அதன்பின்னர், தகவல் தொடர்பான செயலிக்கு எனது பணியை மாற்றினார்கள். 

அதில் வேறு பணி, வேறு டாஸ்க் என்ற பெயரில், அதிக அளவில் பணம் முதலீடு செய்தால் அதிகமாக சம்பாதிக்க முடியும் என்று கூறினார்கள். நானும் நம்பி பணத்தை செலுத்தினேன். ஆனால், வருமானம் வரவில்லை. அந்த மோசடியாளர்கள் என்னிடம் இருந்து அக்டேபர் 20-ம் தேதிக்குள் 15.20 லட்சம் ரூபாய் பணத்தை மோசடி செய்துவிட்டனர்" என்று அதில் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

man loss 15 lakhs money in online


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->