இந்திய பார் கவுன்சில் தலைவராக 07-வது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ள மனன் குமார் மிஷ்ரா..!
Manan Kumar Mishra has been elected as the Chairman of the Bar Council of India for the 07th time
இந்திய பார் கவுன்சில் தலைவராக மனன் குமார் மிஷ்ரா மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் மூத்த வழக்கறிஞரும், மாநிலங்களவை எம்.பி.யும் ஆவார். இவர் தொடர்ந்து 07-வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மிஷ்ரா எதிர்த்து யாரும் போட்டியிடாததால் அவர் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இவரது தலைமையின் சீழ் நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என இந்திய பார் கவுன்சில் தலைமை செயலாளர் ஸ்ரீமன்டோ சென் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், துணைத் தலைவர் பதவிக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியின் எஸ். பிரபாகரன், டெல்லியை சேர்ந்த வேத் பிரகாஷ் சர்மா ஆகியோர் போட்டியிடுகிறார்கள். நாளை இதற்கான தேர்தல் நடைபெறுகிறது.
அத்துடன், மே 17-ஆம் தேதி, டெல்லியில் வழக்கறிஞர் பிரதிநிதிகள் மற்றும் மாநில பார் கவுன்சில் உறுப்பினர்களின் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டம் உள்ளிட்ட பல்வேறு விசங்கள் குறித்து விவாதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Manan Kumar Mishra has been elected as the Chairman of the Bar Council of India for the 07th time