இந்தியாவுக்கு திரும்பி வரும் 500 வருட பழமையான திருடப்பட்ட சிலை !! - Seithipunal
Seithipunal


இங்கிலாந்த் நாட்டின் புகழ்பெற்ற பல்கலைக்கழகமான ஆக்ஸ்போர்டு யூனிவர்சிட்டி , தமிழ்நாட்டில் உள்ள கோவிலில் இருந்து திருடப்பட்டதாக நம்பப்படும் 500 ஆண்டுகள் பழமையான வைணவத்தில் 12 ஆழ்வார்களில் ஒருவரான மங்கை ஆழ்வாரின் வெண்கல சிலையை இந்தியாவுக்கு திருப்பித் தர உறுதி அளித்துள்ளது.

“மார்ச் மாதம் 11ஆம் தேதி, ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழக உயர் மட்ட குழு, ஆஷ்மோலியன் அருங்காட்சியகத்தில் இருந்து 16 ஆம் நூற்றாண்டின் புனித திருமங்கை ஆழ்வாரின் வெண்கல சிற்பத்தை திரும்பப் பெறுவதற்கான இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் கோரிக்கையை ஆதரித்தது. இந்த முடிவு இப்போது அறக்கட்டளை ஆணையத்தின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்படும், ”என்று பல்கலைக்கழகத்தின் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

திருமங்கை ஆழ்வாரின் இந்த வெண்கல சிலை 60 செ.மீ உயரம் கொண்டுள்ளது , பிரிட்டனை சேர்ந்த டாக்டர் ஜே.ஆர். பெல்மாண்ட் என்ற பழமையான பொருள் சேகரிப்பாளரின் சேகரிப்பில் இருந்து 1967 ஆம் ஆண்டில் சோதேபியின் ஏல மையத்திலிருந்து ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் உள்ள அஷ்மோலியன் அருங்காட்சியகத்தால் இந்த ஆழ்வார் வெண்கல சிலை வாங்கி ஆக்ஸ்போர்ட் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டது.

தமிழ்நாட்டில் உள்ள ஒரு கோவிலில் இருந்து திருடப்பட்டதாக நம்பப்படும் ஆழ்வாரின் வெண்கல சிலையை தங்களிடம் திருப்பி ஒப்படைக்க இந்திய அரசாங்கம் முறையான கோரிக்கையை பிரிட்டன் அரசாங்கத்திடமும், ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்திற்கும் முன் வைத்தது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mangai aazhvaar statue returns to tamilnadu after 500 years


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->