மணிப்பூர் விவகாரம்! பாராளுமனறத்தில் ஒத்திவைப்பு நோட்டீஸ்! - Seithipunal
Seithipunal


இந்திய பாராளுமன்றம் பரபரப்பான சூழ்நிலையில் இன்று காலை 11 மணிக்கு கூடுகிறது. மணிப்பூர் வன்முறை, விலைவாசி உயர்வு உள்ளிட்டவை குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்ப உள்ளது..

இந்நிலையில் நின்று மணிப்பூரில் இரண்டு பழங்குடியின பெண்களை நிர்வாணமாக்கப்பட்டு அவர்களை ஊர்வலமாக இழுத்து செல்லப்படும் காட்சி இதயத்தை நொறுங்கச் செய்துள்ளது.

பல்வேறு தரப்பினரும் இதற்க்கு கடும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், இந்த விவகாரம் பாராளுமன்றத்தில் கடுமையான விவாதங்கள் நடக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது.

மணிப்பூர் விவகாரம் குறித்து இரு அவைகளிலும் விவாதிக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம.பி. எலராமன் கரீம், காங்கிரஸ் எம்பி. இம்ரான் பிரதாப்கார்கி, உத்தவ் தாக்கரேயின் சிவசேனா எம்.பி. பிரியங்கா சதுர்வேதி போன்ற பல்வேறு கட்சிகள் ஒத்திவைப்பு நோட்டீஸ் வழங்கியுள்ளது. 

இதற்கிடையே, தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ''மணிப்பூரில் பெண்கள் மீதான கட்டவிழுந்து விடப்பட்டுள்ள வன்முறை சம்பவத்தை கண்டு என் இதயம் நொறுங்கி விட்டது. மனசாட்சி எங்கே? மனித குலத்தின் ஆன்மாவையே வெறுப்பும் விஷத்தனமும் வேரோடு பிடுங்குகிறது என முதல்வர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

இதேபோல், தேசிய பெண்கள் ஆணைய உறுப்பினரும் நடிகையுமான குஷ்பு தெரிவிக்கையில்; மணிப்பூரில் வன்முறை போர்வையில் இரண்டு பெண்களை நிர்வாணப்படுத்தி, அவர்களை வன்கொடுமை செய்த காட்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த மாதிரி கொடுமைகளை அரசியல் ரீதியாக அணுகுவதைவிட மனிதாபிமானத்துடன் அணுக வேண்டும். ஒரு நல்ல குடிமகனாக இந்த மாதிரி அவலங்கள் நடக்காமல் தடுக்க வழிகாண வேண்டும். இந்த கொடுமையை செய்தவர்களுக்கு 'மரண தண்டனை வழங்க வேண்டும்' என நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Manipur issue parliament adjournment notice


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->