மத்திய இணையமைச்சர் வீட்டில் பெட்ரோல் குண்டுவீச்சு! - Seithipunal
Seithipunal


மணிப்பூரில் உள்ள மத்திய இணையமைச்சர் ஆர்.கே.ரஞ்சன் சிங்கின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது. 

பாஜக ஆட்சி நடைபெற்று வரும் மணிப்பூரில் மைதேயி சமூகத்தினருக்கும், குகி பழங்குடியினருக்கும் இடையே சில தினங்களுக்கு முன்பு பெரும் கலவரம் வெடித்தது. மணிப்பூர் மாநிலத்தில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி சமூகத்தினா், தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து கோரிவருகின்றனர். 

ஆனால் இதற்கு குகி பழங்குடியினா் எதிா்ப்பு தெரிவிக்கின்றனர். இதனால் அங்கு பிரச்சனை ஏற்பட்டது. பின்னர் அது கலவரமாக மாறியது. இதனையடுத்து மணிப்பூர் மாநிலம் முழுவதுமே ராணுவம் மற்றும் அசாம் ரைஃபிள்ஸ் படையினா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனா். மேலும் அங்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. 

எனினும் இந்த பாதுகாப்பு நடவடிக்கைகளையும் தாண்டி அவ்வப்போது வன்முறை சம்பவங்கள் நிகழ்கிறது. இந்நிலையில் மணிப்பூர் தலைநகர் இம்பாலில் உள்ள மத்திய இணையமைச்சர் ரஞ்சன் சிங்கின் வீட்டின் முன்பு நேற்று இரவு 8.30 மணியளவில் சில போராட்டக்காரர்கள் பெட்ரோல் குண்டு வீசியுள்ளனர். 

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக பாதுகாப்புப் பணியில் இருந்த மத்திய படையினர் கலவரத்தை கட்டுப்படுத்துவதற்காக வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். மத்திய இணையமச்சரின் வீட்டில் யாரும் இல்லாததால் எந்தவித அசம்பாவிதமும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

manipur minister home attack petrol bomb


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->