வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூரில் இன்று முதல் மீண்டும் பள்ளிகள் திறப்பு.! - Seithipunal
Seithipunal


வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூரில் நீண்ட நாட்களுக்கு பின்னர் இன்று பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது.

மணிப்பூர் மாநிலத்தில் கடந்த மே மாதம் தொடங்கிய இரு சமூகத்தினர் இடையே ஏற்பட்ட வன்முறையால், அந்த மாநிலமே போர்க்களமாக காட்சியளித்து வருகிறது. இந்த வன்முறையால் இதுவரை 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும், பலர் காயமடைந்துள்ளனர், ஏராளமான பொது சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளது. 

மணிப்பூரில் கலவரத்தை கட்டுப்படுத்த ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு பழங்குடியினத்தை சேர்ந்த இரண்டு பெண்களை நிர்வாணமாக இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

தற்போது இந்த சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் மணிப்பூர் வன்முறை சம்பவம் குறித்து மூன்று ஓய்வு பெற்ற நீதிபதிகள் கொண்ட விசாரணைக் குழுவை நியமித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில் மணிப்பூரில் நீண்ட நாட்களுக்குப் பிறகு இன்று பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. அதன்படி மணிப்பூர் மாநிலத்தில் முதல் கட்டமாக 9, 10, 11, 12ம்  வகுப்புகளுக்கு மட்டும் இன்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Manipur schools open from today


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->