மணிப்பூர் வன்முறை குறித்து ஐரோப்பிய நாடாளுமன்றம் தீர்மானம்! கண்டனம் தெரிவித்த இந்தியா!
Manipur violence European Parliament resolution India condemned
மணிப்பூரில் குகி மற்றும் மெய்தி சமூகத்தினருக்கு இடையில் ஏற்பட்ட தொடர் வன்முறையால் இது வரை 100 க்கு மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்:
இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில், குகி மற்றும் மெய்தி சமூகத்தினருக்கு இடையில் மோதல் ஏற்பட்டு அது வன்முறையாக வெடித்துள்ளது.
இந்த வன்முறை கடந்த மே மாதம் 3-ந்தேதி தொடங்கிய இன்று வரை முடிவுக்கு வராமல் ஆங்காங்கே வெடித்த வண்ணம் உள்ளது. இரு பிரிவினருக்கு இடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக இதுவரை 100-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.
இதுவரை மணிப்பூர் வன்முறை குறித்து பிரதமர் மோடி பேசாததால், எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வருகிறது. பிரதமர் மோடி பிரான்ஸ் சென்றுள்ள நிலையில் மணிப்பூர் வன்முறை தொடர்பாக ஐரோப்பிய நாடாளுமன்றம் தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது.
இதற்கு இந்தியா சார்பில், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் 'காலனித்துவ மனநிலையின் பிரதிபலிப்பு' என கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் மனித உரிமை சூழ்நிலை குறித்து ஐரோப்பிய நாடாளுமன்றம் தீர்மானம் நிறைவேற்றியதில், மணிப்பூர் வன்முறையை குறிப்பிட்டுள்ளது.
பிரான்ஸ் ஸ்ட்ராஸ்போர்க்கில் இருக்கும் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் ''இன மற்றும் மத வன்முறையை நிறுத்துவதற்கும், அனைத்து மத சிறுபான்மையினரையும் பாதுகாப்பதற்காக இந்திய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதற்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்சி தெரிவிக்கையில்; ''மணிப்பூர் வன்முறை குறித்து ஐரோப்பிய பாராளுமன்றத்தில் விவாதம் செய்ததையும், தீர்மானம் நிறைவேற்றியதையும் பார்த்தோம். இந்தியா, உள்நாட்டு விவகாரங்களில் இது போன்ற தலையிடுவது ஏற்றுக்கொள்ள முடியாதது.
மேலும் மணிப்பூரில் அமைதி நிலவ, நீதித்துறை உள்பட அனைத்து அதிகாரிகளும் நடடிவக்கை எடுத்து வருகிறார்கள். ஐரோப்பிய நாடாளுமன்றம் தனது நேரம் முழுவதையும் அதன் உள் பிரச்சினைகளில் பயன்படுத்தி கொள்ளுமாறு அறிவுறுத்தப்படும்'' என தெரிவித்தார்.
English Summary
Manipur violence European Parliament resolution India condemned