மணிப்பூர் கலவரத்தில் மனிதம் காத்த பெண்கள்! மாற்று இன பெண்களை பாதுகாப்பாக அழைத்து சென்ற நெகிழ்ச்சி சம்பவம்! - Seithipunal
Seithipunal


கடந்த 3-ந்தேதி மணிப்பூர் மாநிலத்தில் மெய்தெய் சமூகத்தினருக்கும், பழங்குடியினருக்கும் இடையே மோதல் உருவானது. இந்த மோதல் கலவரமாக மாறி, மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் பரவியது .

இந்த கலவரத்தில் வீடுகள், பள்ளிகள், ஆலயங்கள், வணிக வளாகங்கள் அடித்து நொறுக்கி, தீ வைத்து கொளுத்தப்பட்டன. அப்பாவி மக்கள் தங்களின் உயிரை கையில் பிடித்துன்கொண்டு பாதுகாப்பை தேடி அண்டை மாநிலங்களுக்கு தப்பி சென்றனர்.

இந்நிலையில், சுராசந்த்பூர் நகரில், குகி இனத்தைச் சேர்ந்த பெண்கள் மனிதச் சங்கிலியை உருவாக்கி, மைதேயி இன மக்களை பத்திரமாக மீட்டு உதவி செய்த நெகிழ்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.

பாதிக்கப்பட்ட மக்களை மீட்க வந்த இராணுவ வீரர்கள் ஒருபக்கம் நிற்க, மறுபக்கம் வன்முறை கும்பல் மீட்கவிடாமல் தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, சாலை முழுக்க குகி இனப் பெண்கள் ஒன்று கூடி, மைதேயி இன மக்களை பாதுகாப்பாக இராணுவ வீரர்களிடம் ஒப்படைத்தனர்.

இனவெறியில் தக்க நிற்கும் கும்பலுக்கு மத்தியில், மனிதம் காத்த பெண்களின் இந்த காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகி மக்களின் பரட்டை பெற்றுள்ளது.

மேலும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் இதேபோன்ற நெகிழ்ச்சி சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. இந்த புவி அனைவருக்குமானது. நம்மை போலவே அனைவருக்கும் இங்கு வாழ உரிமை உள்ளது என்ற தத்துவத்தை உலகத்திற்கு இந்த பெண்கள் தெரிவித்துள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Manipur Violence some incident


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->